உச்ச நீதிமன்றம் - இந்தியாவில் உணவுப் பாதுகாப்புச் சமத்துவமின்மை
March 24 , 2025 143 days 120 0
சில மாநிலங்களின் மக்கள் தொகையில் சுமார் 70% பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் நிலையில், அதிக மேம்பாட்டு விகிதம் மற்றும் தனிநபர் வருமானம் என்ற சில கூற்றுக்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசியலமைப்பின் 21வது சரத்தின் கீழ் ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் ஒரு அடிப்படை வாழ்க்கை உரிமையின் அடிப்படையில் ஒரு நாளைக்கு என்று குறைந்தது இரண்டு வேளை உணவைப் பெற ஒரு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உணவு தானியங்களை வழங்க மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ், உணவு தானிய வழங்கீடு ஆனது 81.35% சதவீதமாக இருந்தது.
அங்கன்வாடி திட்டத்தின் கீழ் சுமார் 11 கோடி மக்களுக்கு கூடுதல் உதவிகள் வழங்கப் படுகின்றன என்பதோடு இது மேலும் 22 கோடி மக்களை உள்ளடக்குகிறது.