ஜம்மு காஷ்மீரில் உஜ் பல்நோக்குத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதற்காக நடைபெற்ற ஒரு கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்கினார்.
இந்தத் திட்டமானது ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உஜ் நதியில் கட்டத் திட்டமிடப் பட்டுள்ளது.
ராவி ஆற்றின் ஒரு முக்கியத் துணை நதி உஜ் நதியாகும்.
இந்தத் திட்டமானது சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் (1960) படி, இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட கிழக்கு நதிகளின் (ராவி, சட்லஜ் மற்றும் பியாஸ்) நீரின் பயன்பாட்டை மேம்படுத்த இருக்கின்றது.