TNPSC Thervupettagam

உடல் உறுப்பு தானத்திற்கான சிறந்த மாநில விருது - தமிழ்நாடு

August 5 , 2026 2 days 57 0
  • புதுடெல்லியில் நடைபெற்ற 16வது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில், உடல் உறுப்பு தானத்திற்கான 'சிறந்த மாநில' விருதை தமிழ்நாடு பெற்றுள்ளது.
  • மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்பு தானத்தில் மாநிலத்தின் சிறந்த செயல் பாட்டை அங்கீகரிக்கும் வகையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் இவ்விருது வழங்கப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 266 பேர் இறந்த பிறகு உறுப்பு தானம் செய்துள்ளனர் மற்றும் 1,476 உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன.
  • தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையமானது (TRANSTAN) 2008 ஆம் ஆண்டு முதல் இம்மாநிலத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை முறைப்படுத்தி, ஊக்குவித்து வருகிறது.
  • இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.
  • மேலும், 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2026 ஆம் ஆண்டு ஜூலை வரை மூளைச் சாவு அடைந்த 798 கொடையாளர்களை அரசு மரியாதையுடன் சிறப்பித்துள்ளது.
  • 2008 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2026 ஆம் ஆண்டு ஜூலை வரை, இறந்த 2,490 கொடையாளர்களிடமிருந்து உடல் உறுப்பு தானத்தை தமிழ்நாடு எளிதாக்கியுள்ளது, இதன் மூலம் 14,532 உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்