TNPSC Thervupettagam

உடல் ரீதியாக செயல்பாடற்ற நிலையில் உள்ள இளம் பருவத்தினர்: லான்செட் ஆய்வு

November 23 , 2019 2015 days 727 0
  • இளம் பருவத்தினரின் போதிய செயல்பாடற்ற நிலைக்கான உலகளாவியப் போக்கு குறித்த முதலாவது ஆய்வின் படி, 85% சிறுமியர்கள் மற்றும் 78% சிறுவர்கள் ஆகியோர் மிக அதிக அளவில் போதிய உடல் ரீதியான செயல்பாடுகளைக் கொண்டிருக்க வில்லை.
  • இந்த அறிக்கையானது உலக சுகாதார அமைப்பினால் வெளியிடப்பட்டு, “லான்செட் சைல்ட் & அடல்ட்ஸ் ஹெல்த்” என்ற இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
  • 2001-16க்கு இடைப்பட்ட கால கட்டத்தில் 146 நாடுகளில் உள்ள 11 வயது முதல் 17 வயதுடைய 1.6 மில்லியன் மாணவர்களிடமிருந்துப் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • இந்தியாவில் 71.8% சிறுவர்களும் 76.3% சிறுமிகளும் “உடல் ரீதியாகச் செயல்பாடற்ற நிலையில் உள்ளனர்” என வகைப்படுத்தப் பட்டுள்ளனர்.
  • சிறுவர்களும் சிறுமிகளும் உடல் ரீதியாகச் செயல்பாடற்ற நிலையில் இருப்பதற்கு கிரிக்கெட் விளையாட்டு மற்றும் வீட்டு வேலைகள் ஆகியவையே காரணம் என்று இந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்