உடல் ரீதியான தண்டனையை நீக்குவதற்கான வழிகாட்டுதல்கள்
April 30 , 2024 460 days 397 0
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையானது பள்ளிகளில் உடல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படுவதனை ஒழிப்பதற்கான வழிகாட்டுதல்களை (GECP) வெளியிட்டுள்ளது.
மாணவர்களின் மனநலத்தைப் பாதுகாப்பது மற்றும் இந்த வழிகாட்டுதல்களை திறம்பட செயல்படுத்துவதற்காக வேண்டி தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) பல்வேறு வழிகாட்டுதல்களை பங்குதாரர்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கான விழிப்புணர்வு முகாம்களை நடத்துவது ஆகியவை இதில் அடங்கும்.
NCPCR வழங்கிய உடல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படுவதனை ஒழிப்பதற்கான வழிகாட்டுதல்களை அமல்படுத்துமாறு தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைகள் சட்டத்தின் 17(1)வது பிரிவில் குறிப்பிட்டுக் காட்டப் பட்டுள்ளபடி, உடல் ரீதியான ஒரு தண்டனை என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.