இந்திய விமான நிலைய ஆணையமானது (AAI - Airports Authority of India) குறைந்த கட்டணமுடைய விமான சேவை நிறுவனமான ஏர் ஒடிசாவின் உடான் (UDAN - Ude Desh ka Aam Nagrik) உரிமத்தை அதன் ஒழுங்கற்ற விமான சேவையின் காரணமாக 7 விமான நிலையங்களுக்கு ரத்து செய்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட 7 விமான நிலையங்களாவன : ஜார்சுகுடா, ராய்ப்பூர், ராய்கர், பிலாஸ்பூர், அம்பிகாபூர், ஜகதல்பூர் மற்றும் விசாகப்பட்டினம்.
ஒடிசாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட ஜார்சுகுடா விமான நிலையத்தின் சேவை வழங்கும் ஒரே விமான இயக்கு நிறுவனமாக இது இருந்தது.