2022 ஆம் ஆண்டானது உதே தேஷ் கா ஆம் நாக்ரிக் (UDAN) என்ற திட்டத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
உடான் முன்னெடுப்பானது, பிராந்திய இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியான பிராந்திய விமான நிலைய மேம்பாட்டுத் திட்டமாகும்.
415க்கும் மேற்பட்ட உடான் வழித் தடங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் மற்றும் நீர்வழி விமான ஏவுதளங்கள் உள்ளிட்ட 66 குறைவான/சேவை செய்யப்படாத விமான நிலையங்களை இணைக்கின்றன.