உடான் (உடே தேஷ்கா ஆம் நகரிக்) எனப்படும் பிராந்திய இணைப்புத் திட்டம் (Ude Deshka Aam Nagrik) ஆனது, “புத்தாக்கம் (பொது) – மையப் பிரிவு” என்ற பிரிவின் கீழ் 2020 ஆம் ஆண்டிற்கான பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இது பொது விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமாகும்.
இத்திட்டமானது, அளவுரு சார்ந்த இலக்குகளை அடைவதை விட, தரமான நிர்வாகம், தரமான சாதனைகள் மற்றும் தொலைதூர இணைப்பு ஆகியவற்றின் மீது ஈடுபாடு செலுத்துகிறது.