உட்குழு இனப்பெருக்கம் - தீங்கு விளைவிக்கும் மரபணு மாறுபாடுகள்
August 8 , 2023 750 days 394 0
தெற்காசிய இனங்களில் காணப்படும் அதிகப்படியான ஓரினச் சேர்க்கை மரபணு வகைகளானது பெரும்பாலும் சாதி, உட்குழு இனப்பெருக்கம் மற்றும் இரத்தத் தொடர்பு உடைய உறவுகளுடனான உடலுறவுகளின் விளைவாக இருக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
இத்தகைய ஒரு நிகழ்வானது மரபணுக் கோளாறுகள் அதிகளவில் ஏற்படுவதற்கு வழி வகுக்கும்.
தென்னிந்திய மற்றும் பாகிஸ்தானிய உட்குழுக்கள் அதிக அளவில் மிகுந்த உள் இனக் கலப்பினைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறுப் பகுதிகளைச் சேர்ந்த மக்களிடையே அதிக அளவிலான மரபணு வேறுபாடுகள் இருப்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
மனிதர்களின் உடலில் பொதுவாக ஒவ்வொரு மரபணுவின் இரண்டு பிரதிகள் காணப் படும்.
ஒரு மனிதரின் உடலில் ஒரே மரபணுவின் இரண்டு பிரதிகள் இருந்தால், அது ஓரினச் சேர்க்கை மரபணு வகை எனப்படும்.