உட்செலுத்தப்படும் கருத்தடை மருந்துகள் தமிழ்நாட்டில் அறிமுகம்
September 15 , 2017 2879 days 1142 0
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துறை 'அந்தரா' (Antara) என்ற திட்டத்தின் கீழ் உட்செலுத்தக் கூடிய கருத்தடை மருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது .
குழந்தைகள் பிறப்புக்கு இடையே போதிய இடைவெளி இல்லாததால் உடல் ரீதியாக சிக்கல்கள் ஏற்பட்டு பிரசவத்தின்போது தாய்மார்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகள் குழந்தைகள் உயிரிழக்கின்றனர்.
இதனைத் தடுக்கும் விதத்திலும், மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும் டி.எம்.பி.ஏ / டிப்போ மெட்ராக்சி ப்ரோஜெஸ்டெரோன் அசிடேட் (Depot Medroxy Progesterone Acetate - DMPA) எனும் ஊசி மூலம் உட்செலுத்தக்கூடிய கருத்தடை மருந்துகள் 'அன்டரா' திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.
மாநிலத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் கிடைக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 முதல் 45 வயதிற்கு உட்பட்ட பெண்களால் இந்த மருந்தினைப் பயன்படுத்த முடியும். மேலும் இந்தக் கருத்தடை மருந்தின் விளைவுகள் மீளக்கூடியவை ஆகும், அதாவது இந்த மருந்தின் பயன்பாட்டை நிறுத்திய மூன்று மாதங்களில் பெண்கள் மீண்டும் கருவுற முடியும்.