TNPSC Thervupettagam

உணவினை வாங்குவதற்கான திறன் சார்ந்தக் குறியீடு

July 6 , 2025 2 days 23 0
  • சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் வறுமை நிலை வெகுவாகக் குறைந்துள்ளதாக புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
  • 2023–24 ஆம் ஆண்டில் கிராமப்புற வறுமை 4.86% ஆகவும், நகர்ப்புற வறுமை 4.09% ஆகவும் இருப்பதாக பாரத் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
  • உலக வங்கியானது, கிராமப்புற வறுமை 2.8% ஆகவும், நகர்ப்புற வறுமை 1.1% ஆகவும் உள்ளது என இன்னும் குறைவான எண்களை முன்வைக்கிறது.
  • இந்த எண்கள் மக்களின் உண்மையான வாழ்க்கை நிலைமைகளைக் காட்டாது என்று பல நிபுணர்கள் நம்புகின்றனர்.
  • கலோரி உட்கொள்ளல் மூலம் வறுமையை அளவிடும் பழைய முறையை இந்தியா இன்னும் பயன்படுத்துகிறது.
  • "உணவினை வாங்குவதற்கான திறன் சார்ந்த ஒரு குறியீடு" என்று அழைக்கப்படும் ஒரு புதிய கருத்தாக்கம், ஓர் எளிய இந்திய உணவைப் பயன்படுத்தி உணவின் மலிவுத் தன்மையை மதிப்பிடுகிறது.
  • Crisil நிறுவனத்தின் மதிப்பீடுகள் ஆனது ஓர் அடிப்படை சைவ உணவினை வாங்க இந்தியாவில் சுமார் 30 ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடுகிறது.
  • ஆனால் 2023–24 ஆம் ஆண்டில் கிராமப்புற மக்களில் 40% பேரும், நகர்ப்புற மக்களில் 10% பேரும் ஒரு நாளைக்கு இரண்டு உணவினையும் வாங்க முடியாத ஒரு நிலையில் இருந்தனர்.
  • இதில் வறுமை நிலை குறைவாகத் தோன்றினாலும், பலர் இன்னும் மறைக்கப்பட்ட கணக்கிடப்படாத பட்டினி நிலையினால் மிகவும் அவதிப்படுகிறார்கள் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்