உணவு இறக்குமதி நிராகரிப்பு எச்சரிக்கைக்கான இணைய தளம்
September 28 , 2024 301 days 228 0
இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது உணவு இறக்குமதி நிராகரிப்பு எச்சரிக்கை (FIRA) என்ற இயங்கலை இயங்கு தளத்தினை உருவாக்கி உள்ளது.
இந்திய எல்லைகளில் உணவு இறக்குமதி நிராகரிப்புகள் குறித்து பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவிப்பதை இது ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
மோசமானப் பாதுகாப்புத் தரங்கள் காரணமாக இந்திய அரசினால் நிராகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்து இது எச்சரிக்கைகளை உருவாக்கும்.
நிராகரிக்கப்பட்ட உணவினால் ஏற்படும் உணவுப் பாதுகாப்பு மற்றும் உடல்நல அபாயங்கள் குறித்து உலகெங்கிலும் உள்ள அதிகாரிகளிடையே விரைவான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கு இந்த இணைய தளம் வழிவகுக்கும்.
சமீபத்தில் FSSAI ஆனது இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,500 உணவுப் பொருட்களை நிராகரித்துள்ளது.