உணவு இழப்பு மற்றும் வீணாதல் பற்றிய சர்வதேச விழிப்புணர்வு தினம் - செப்டம்பர் 29
September 30 , 2023 821 days 340 0
உணவு இழப்பு மற்றும் வீணாதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், அதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்குமான ஒரு வாய்ப்பாக இது கருதப்படுகிறது.
2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "உணவு இழப்பு மற்றும் வீணாதலை குறைத்தல்: உணவு முறைகளை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளச் செய்தல்" என்பதாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் கூற்றுப்படி, ஆண்டு தோறும் 1.3 பில்லியன் டன் உணவு வீணடிக்கப் படுவதால் உலகிற்கு 750 பில்லியன் டாலர்கள் இழப்பாகிறது.
மொத்த உணவுக் கழிவுகளில் 61 சதவீதம் வீடுகளில் இருந்தும், 26 சதவீதம் உணவு சேவை வழங்கீட்டு அமைப்புகளிலிருந்தும், 13 சதவீதம் சில்லறை விற்பனையில் இருந்தும் வெளியாகின்றன.
உலகளவில், உணவுக் கழிவுகள் ஆனது உலகளாவியப் பசுமை இல்ல வாயு உமிழ்வில் சுமார் 20 சதவிகித பங்கினைக் கொண்டுள்ளன.
இது மனிதனால் வெளியிடப்படும் மொத்த வாயு வெளியேற்றத்தில் மூன்றில் ஒரு பங்காகும்.
உணவு வீணடிக்கப்படுவதில் இந்தியாவின் பங்களிப்பு, ஆண்டுதோறும் 68.8 மில்லியன் டன்கள் அதாவது உலகளாவிய உணவு வீணாதலில் 7 சதவீதம் ஆகும்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களில் சுமார் 40 சதவீதம் வரை வீணடிக்கப் படுகிற நிலையில், அதாவது 50000 கோடி ரூபாய் மதிப்பிலான உணவுகள் வீணடிக்கப் படுகின்றன.