TNPSC Thervupettagam

உணவு நெருக்கடி பற்றிய உலகளாவிய அறிக்கை

April 28 , 2024 19 days 99 0
  • 2024 ஆம் ஆண்டின் உணவு நெருக்கடி குறித்த உலகளாவிய அறிக்கையினை (GRFC) உணவுப் பாதுகாப்பு தகவல் வலையமைப்பினால் தயாரிக்கப்பட்டு, உணவு நெருக்கடிகளுக்கு எதிரான உலகளாவிய வலையமைப்பினால் வெளியிடப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டில் 59 நாடுகளில் சுமார் 282 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டனர்.
  • ஒட்டு மொத்தமாக, மதிப்பிடப்பட்ட 5 பேரில் ஒருவர் தீவிர அவசர நடவடிக்கை மேற் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருந்தனர்.
  • 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையிலான தரவுகளின் அடிப்படையில், 12 நாடுகளில் நிலவும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலை மோசமடைந்து உள்ளது.
  • இந்த நாடுகளில், பெரும்பாலும் சூடானில் உள்ள 13.5 மில்லியன் மக்களுக்கு அவசர உதவியின் தேவையுள்ளது.
  • இதற்கிடையில், 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையிலான தரவுகளின் அடிபிப்படையில் 17 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு நிலை மேம்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்