உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் விரைவாக்கத் திட்டம்
June 14 , 2023 926 days 518 0
ஃபார்மர்ஸ் ஃப்ரெஸ் சோன் (FarmersFZ) என்ற தளமானது, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) விரைவாக்கத் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
ஃபார்மர்ஸ்FZ என்பது கொச்சியி’ல் அமைந்துள்ள ஒரு பல்லூடகச் சந்தைத் தளமாகும்.
இது கேரளப் புத்தொழில் திட்டம் (KSUM) என்ற திட்டத்தின் கீழ் செயல்படுகிறது.
வணிகத்தின் மேம்பாட்டிற்காக உலகெங்கிலும் உள்ள 12 வேளாண்-உணவு புத்தொழில் நிறுவனங்களின் பட்டியலில் இது இடம் பெற்றுள்ளது.