TNPSC Thervupettagam

உணவு மற்றும் வேளாண்மைக்கான தாவர மரபணு வளங்களுக்கான சர்வதேச ஒப்பந்தத்தின் ஆளுகை அமைப்பு

September 22 , 2022 1028 days 419 0
  • உணவு மற்றும் வேளாண்மைக்கான தாவர மரபணு வளங்களுக்கான சர்வதேச ஒப்பந்தத்தின் ஆளுகை அமைப்பின் ஒன்பதாவது அமர்வு தேசிய தலைநகரில் நடைபெற்றது.
  • உணவு மற்றும் வேளாண்மைக்கான தாவர மரபணு வளங்களுக்கான சர்வதேச ஒப்பந்தத்தின் (ITPGRFA) 19வது பிரிவின் படி இந்த ஆளுகைக் குழு கூட்டப்பட்டது.
  • இந்த அமர்வானது, “பயிர் வகைகளின் பன்முகத்தன்மையின் பாதுகாவலர்களைக் கொண்டாடுதல்: 2020 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய உள்ளார்ந்த உலகளாவியப் பல்லுயிர்க் கட்டமைப்பை நோக்கி” என்ற கருத்துருவின் கீழ் ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளது.
  • இந்தச் சந்திப்பானது முதலில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட திட்டமிடப்பட்டது, ஆனால், முதலில் மே மாதம் மற்றும் பிறகு செப்டம்பர் மாதம் என இரண்டு முறை அது ஒத்தி வைக்கப் பட்டது.
  • ஆளுகைக் குழுவின் எட்டாவது அமர்வானது 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ரோம் நகரில் நடைபெற்றது.
  • உணவு மற்றும் வேளாண்மைக்கான தாவர மரபணு வளங்களுக்கான சர்வதேச ஒப்பந்தம் என்பது 2001 ஆம் ஆண்டில் ரோம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 31வது அமர்வின் போது கையெழுத்தான சட்டப் பூர்வமானப் பிணைப்பு விதிமுறைகள் கொண்ட பலதரப்பு ஒப்பந்தமாகும்.
  • இந்த ஒப்பந்தமானது 2004 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
  • தற்போது இந்தியா உட்பட 149 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்றுள்ளன.
  • இது உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான உடன்படிக்கைக்கு இணங்கச் செய்யும் வகையில் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்