உணவு மற்றும் வேளாண்மையின் எதிர்காலம் - மாற்றத்திற்கான இயக்கிகள் மற்றும் தூண்டுகோல்கள்
January 6 , 2023 990 days 501 0
இந்த அறிக்கையினை உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை வேளாண் உணவு முறைகளின் தற்போதைய மற்றும் அதிகரித்து வரும் இயக்கிகள் மற்றும் அவற்றின் சாத்தியமான எதிர்காலப் போக்குகளைப் பகுப்பாய்வு செய்தது.
இந்த அறிக்கையின்படி, வேளாண் உணவு இலக்குகள் உட்பட 2030 ஆம் ஆண்டு நிலையான மேம்பாட்டு இலக்குகளை அடைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் நிலையான உணவுப் பாதுகாப்பின்மை, வளங்களின் சீரழிவு மற்றும் நீடித்து நிலைக்க முடியாத பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை உலகம் எதிர் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு மற்றும் ஒட்டு மொத்த நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு விளைவுகளைக் கொண்டு வரும் வேளாண் உணவு முறைகளுக்கான பின்வரும் நான்கு எதிர்கால சூழ்நிலைகளை இந்த அறிக்கை கணித்துள்ளது.