உணவுத் தானியங்கள் & சர்க்கரைப் பொருட்கள் - சணலில் பொதி கட்டுதல்
November 29 , 2019 2216 days 722 0
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவானது உணவு தானியங்கள் மற்றும் சர்க்கரைப் பொருட்களை சணல் பொருட்களில் பொதி கட்டுதல் (பேக்கேஜிங்) செய்வதைக் கட்டாயமாக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இது சணல் தொழிற்துறையைப் பல்வகைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இருக்கின்றது.
இந்த ஒப்புதலானது நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பிராந்தியங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும்.