2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் உணவுப் பொருட்களின் விலைகள் பணவாட்டத்தினை எதிர்கொண்டன (-0.2%) என்ற நிலையில்இது 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2.2% குறைந்த சில்லறைப் பண வீக்கத்திற்குப் பங்களித்தது.
பணவாட்டம் என்பது பொது விலை மட்டத்தில் ஏற்படும் தொடர்ச்சியான வீழ்ச்சியாகும் என்பதோடுஇது பணத்தின் வாங்கும் சக்தியை அதிகரிக்கிறது.
முக்கியக் காரணங்களில் பலவீனமான தேவை, அதிக உற்பத்தித்திறன் காரணமாக அதிகப்படியான வழங்கல் மற்றும் நெருக்கடியான கடன் அல்லது அதிகமான வட்டி விகிதங்கள் ஆகியவை அடங்கும்.
இது பணவாட்டச் சுழலைத் தூண்டி, தாமதமான கொள்முதல்கள், குறைக்கப்பட்ட வணிக இலாபங்கள், அதிக வேலைவாய்ப்பின்மை மற்றும் அதிகரித்த உண்மையான கடன் சுமை ஏற்படலாம்.
பணவாட்டத்தைச் சமாளிப்பதற்கான கொள்கை நடவடிக்கைகளில் விரிவாக்கப் பணவியல் கொள்கை (ரெப்போ விகிதத்தைக் குறைத்தல், அளவு சார் தளர்வு, திறந்த சந்தைச் செயல்பாடுகள் மூலம் பணப் புழக்கத்தினைச் செலுத்துதல்- OMO) மற்றும் விரிவாக்க நிதிக் கொள்கை (பொதுச் செலவினங்களை அதிகரித்தல், வரிகளைக் குறைத்தல்) ஆகியவை அடங்கும்.
பணவாட்டம் உண்மையான வீழ்ச்சியை விட விலைகளில் ஏற்படும் மெதுவான உயர்வான பணவீக்கக் குறைப்பிலிருந்து வேறுபடுகிறது.