உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கான உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டம்
May 6 , 2021 1534 days 562 0
உணவுப் பதப்படுத்தும் தொழிற்துறை அமைச்சகமானது உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கான உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்திற்கான (ProductionLinked Incentive Scheme for Food Processing Industry – PLISFPI) இணையவழித் தளத்தினைத் தொடங்கியுள்ளது.
மத்திய அரசின் இந்தத் திட்டமானது 2021-22 முதல் 2026-27 வரையிலான காலக் கட்டத்தில் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டமானது பிரதமர் அறிவித்த ஆத்ம நிர்பர் பாரத் அபியான் திட்டத்தின் ஓர் அங்கமாகும்.
இந்தியாவின் இயற்கை வளங்களைக் கொண்டு உலகளாவிய உணவு உற்பத்திப் பெரு நிறுவனங்களை உருவாக்குவதற்கும் சர்வதேசச் சந்தைகளில் இந்திய உணவு உற்பத்திப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் இந்தத் திட்டம் உதவும்.
இந்தத் திட்டத்தில் இரண்டு கூறுகள் உள்ளன. அவை,
சமைக்க/சாப்பிட தயார் நிலையிலுள்ள உணவுகள், பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றம் காய்கறிகள், கடல்சார் உற்பத்திப் பொருட்கள், மொசரெல்லா (இத்தாலியப் பாலாடைக்கட்டி) போன்ற நான்கு முக்கிய உணவு உற்பத்திப் பொருட்களின் தயாரிப்பிற்கு விற்பனை சார்ந்த ஊக்கத் தொகைகளை வழங்குதல்.
வெளிநாடுகளில் இந்தப் பொருட்களுக்கு அடையாளக் குறியிடுதல் (bronding) மற்றும் சந்தைப்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்வதற்காக சில மானியங்களை வழங்குதல்.