TNPSC Thervupettagam

உணவுமுறை ஆய்வு அறிக்கை 2025

October 10 , 2025 14 hrs 0 min 12 0
  • ICMR-INDIAB உணவுமுறை ஆய்வு 2025 அறிக்கையானது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையினால் (ICMR) வெளியிடப்பட்டது.
  • இந்திய உணவு முறையில் தினசரி கலோரிகளில் சுமார் 62% ஆனது கார்போ ஹைட்ரேட்டுகளிலிருந்து பெறப்படுகிறது, இது உலகளவில் மிக அதிகபட்சமாகும்.
  • இந்த ஆய்வில் 36 மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் டெல்லியில் 121,077 இளம் வயதினர் ஆய்வு செய்யப்பட்டனர்.
  • அதிக கார்போஹைட்ரேட்டு கொண்ட உணவுகளில் வெள்ளை அரிசி, தீட்டப்பட்ட முழு தானியங்கள் மற்றும் கூடுதல் சர்க்கரைகள் அடங்கும்.
  • தெற்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் வெள்ளை அரிசி அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது; வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கோதுமை அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் மட்டுமே சிறு தானியங்கள் பிரதான உணவாக உள்ளது.
  • ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் தவிர கிட்டத் தட்ட அனைத்து மாநிலங்களிலும் நிறைவுற்ற கொழுப்பு உட்கொள்ளல் பாதுகாப்பான வரம்பு நிலைகளை மீறி வருகிறது.
  • பால் மற்றும் விலங்கு மூலங்களிலிருந்து பெறப்படும் புரதங்கள் முறையே 2% மற்றும் 1% பங்குடன் தினசரி கலோரி உட்கொள்ளலில் புரதத்தின் பங்கு 12% மட்டுமே ஆகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்