கோவிட்–19 பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் காலகட்டத்தில் மக்களுக்கு உதவுவதற்காக வேண்டி நான்கு புதிய உதவி எண்களை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
1075 என்பது சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் தேசிய உதவி எண் ஆகும்.
1098 என்பது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் குழந்தைகளுக்கான உதவி எண் ஆகும்.
14566 என்பது சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் மூத்த குடிமக்களுக்கான உதவி எண் ஆகும்.
இது கர்நாடகா, டெல்லி, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் செயல்பாட்டில் இருக்கும்.
08046110007 என்பது மனநல ரீதியிலான ஆலோசனைகளை வழங்குவதற்கான தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் உதவி எண் ஆகும்.