உதவியுடன் கூடிய மரணத்தினைச் சட்டப் பூர்வமாக்குவதற்கான ஒரு மசோதா – பிரான்ஸ்
June 1 , 2025 226 days 188 0
மிகவும் தாங்க முடியாத மற்றும் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் மருத்துவரின் உதவி மூலம் இறப்பதைத் தேர்வு செய்ய அனுமதிக்கும் ஒரு மசோதாவை பிரான்சின் தேசிய சட்டமன்றம் அங்கீகரித்தது.
கடுமையான நிபந்தனைகளின் கீழ், சிலர் தங்கள் வாழ்க்கையை அமைதியாகவும் கண்ணியமாகவும் முடித்துக் கொள்ள மருத்துவ உதவியைக் கோர முடியும்.
பிரான்சில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், மாறாத உடல் அல்லது மன துன்பத்தை ஏற்படுத்தும் கடுமையான, குணப்படுத்த முடியாத நோய் இருந்தால் உதவி மூலம் இறப்பதற்கு விண்ணப்பிக்கலாம்.
இது அங்கீகரிக்கப்பட்டால், இந்தச் சட்டமானது 2026 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக அமலுக்கு வரக்கூடும்.
இந்த ஒரு நடவடிக்கையின் மூலம், உதவி மூலம் இறப்பது ஏற்கனவே சட்டப்பூர்வமான பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளின் வரிசையில் பிரான்ஸ் நாடும் விரைவில் இணையும்.