உதவியுடன் கூடிய மரணம் குறித்த ஐக்கியப் பேரரசின் சட்டம்
December 6 , 2024 277 days 237 0
ஐக்கியப் பேரரசானது, சமீபத்தில் தீராத நோயினால் / நோயின் கடையிறுதி நிலையில் அவதிப்படும் நபர்கள் (வாழ்க்கை முடிவு) மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
நோயின் கடையிறுதி நிலையில் அவதிப்படும் நோயாளிகள் (கொடிய நோய்களில் இருந்து மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள்) தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்கு உதவி கோருவதற்கு இந்த மசோதா அனுமதிக்கிறது.
உதவியுடன் கூடிய ஒரு மரணம் என்பது ஒரு நோயாளி ஒரு மருத்துவரின் உதவியுடன் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் ஒரு செயல்முறையாகும்.
கருணைக் கொலை என்பது மிகவும் தீவிரமாக நோய்வாய்ப்பட்ட ஒரு நோயாளியின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு என்று அதிகபட்சமான மருத்துவரின் ஈடுபாட்டை உள்ளடக்கியது.
18 வயதுக்கு மேற்பட்ட தீவிர நோய்வாய்ப்பட்ட மற்றும் அத்தகைய முடிவை எடுக்கும் மன திறன் கொண்ட ஒரு நபர் மட்டுமே உதவியுடன் கூடிய மரணத்தைக் கோர முடியும் என்று இந்த மசோதா கூறுகிறது.