ஒடிசா மாநிலம் உருவானதைக் குறிக்கும் வகையில் உத்கல் திவாஸ் எனும் ஒடிசா நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பல்வேறு மாகாணங்களில் இருந்து ஒடியா மொழி பேசும் பகுதிகளைப் பிரித்து, 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று ஒடிசா உருவாக்கப் பட்டது.
ஒடியா மொழி மற்றும் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக, இந்தியாவில் மொழியியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாநிலம் இதுவாகும்.
தனி மாநிலத்திற்கான இந்த இயக்கத்தை மதுசூதன் தாஸ் மற்றும் கோபாபந்து தாஸ் போன்ற தலைவர்கள் முன்னெடுத்தனர்.
தொடக்கத்தில், இம்மாநிலத்தில் கட்டாக், பூரி, பாலேஸ்வர், சம்பல்பூர், கோராபுட் மற்றும் கஞ்சம் ஆகிய ஆறு மாவட்டங்கள் மட்டுமே இருந்தன.