இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரக்காஷி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் மேக வெடிப்பு காரணமாக திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
திடீரென பெய்த மழையால் கீர்கங்கா நதி வேகமாகப் பெருக்கெடுத்து ஓடியதால், சாலைகள், கட்டிடங்கள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் மூழ்கின.
பழங்கால கல்ப்கேதர் கோயில் சேதமடைந்து சேற்றில் மூழ்கியது.
இந்த வெள்ளம் ஆனது பாகீரதி நதியைத் தடுத்து, ஒரு செயற்கை ஏரியை உருவாக்கியதோடு, இது கீழ்நோக்கியப் பாய்வில் அமைந்துள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை அச்சுறுத்தியது.
திடீர் வெள்ளம் என்பது கனமழை அல்லது மேக வெடிப்புகளால் ஏற்படும் திடீர், தீவிர வெள்ளமாகும் என்பதோடு இது மிக விரைவான நீர் மட்ட உயர்வு மற்றும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் வலுவான நீரோட்டங்களுக்கு வழிவகுக்கிறது.