2023 ஆம் ஆண்டு குடியரசுத் தின அணிவகுப்பில் பங்கேற்ற மாநிலங்களின் காட்சி வாகனங்களுக்கான விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதில் உத்தரகாண்ட் மாநிலத்தின் மானஸ்கண்ட் என்ற காட்சி வாகனம் முதலிடம் பெற்றது.
இந்த வாகனத்தில், அந்த மாநிலத்தின் வனவிலங்குகள் மற்றும் சமயத் தலங்கள் அடங்கிய கருத்துருவானது காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.
இந்த ஆண்டிற்கான குடியரசுத் தின அணிவகுப்பில் 23 காட்சி வாகனங்கள் காட்சிப் படுத்தப் பட்டன.
இதில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களினால் 17 காட்சி வாகனங்களும், அமைச்சகங்கள் மற்றும் துறைகள் சார்பாக 6 காட்சி வாகனங்களும் காட்சிப் படுத்தப் பட்டன.