உத்தரப் பிரதேச அரசு 2026–27 நிதியாண்டிற்கான ₹9.12 லட்சம் கோடி பட்ஜெட்டை மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.
இது முந்தைய ஆண்டை விட சுமார் 12.9% அதிகமாகும்.
கல்வி, விவசாயம், சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முக்கியச் செலவினங்களுடன் மொத்தப் பட்ஜெட்டில் மூலதனச் செலவு 19.5% ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
நிதி ஆணைய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, நிதிப் பற்றாக்குறை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3% ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதாரம், மருத்துவக் கல்லூரிகள், காவல்துறை உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சித் திட்டங்கள் போன்ற தொழில்நுட்பப் பணிகளுக்கான நிதியை அரசாங்கம் அதிகரித்தது.