உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானாவில் தூய்மையான காற்று திட்டங்கள்
December 18 , 2025 3 days 50 0
உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானாவில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக என்று 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள திட்டங்களை உலக வங்கி அங்கீகரித்தது.
இந்தத் திட்டங்கள் காற்று மாசுபாட்டைக் குறைப்பதன் மூலம் சுமார் 270 மில்லியன் மக்களுக்கு பயனளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
உத்தரப் பிரதேச தூய்மையான காற்று மேலாண்மைத் திட்டம் (UPCAMP) 299.66 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டினைக் கொண்டுள்ளது.
நிலையான மேம்பாட்டிற்கான ஹரியானா தூய்மையான காற்றுத் திட்டம் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டினைக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் இந்திய-கங்கை சமவெளிகள் மற்றும் இமயமலை அடிவாரத்தில் உள்ள பிராந்திய காற்று தர மேலாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.