TNPSC Thervupettagam

உத்திசார் கூட்டாண்மை - இந்தியா மற்றும் எகிப்து

January 29 , 2023 929 days 444 0
  • இந்தியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் தங்களது இருதரப்பு உறவுகளை "உத்தி சார் கூட்டாண்மை என்ற நிலைக்கு" உயர்த்த ஒப்புக் கொண்டுள்ளன.
  • இது அரசியல், பாதுகாப்பு, இராணுவம், எரிசக்தி மற்றும் பொருளாதார அம்சங்களை உள்ளடக்கியது.
  • கடந்த ஐந்தாண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மதிப்பானது, 12 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.
  • இந்தியா எகிப்துடனான ஒரு பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது.
  • மேலும், இணையப் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம், இளையோர், கலாச்சாரம் மற்றும் ஒளிபரப்பு போன்ற பல்வேறு துறைகளில் இந்த ஒப்பந்தம் கவனம் செலுத்துகிறது.
  • எகிப்து நாட்டினை, ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான தொடர்புகளுக்கான நுழைவாயிலாக இந்தியா கருதுகிறது.
  • G-20 அமைப்பின் மாநாட்டிற்கானச் சிறப்பு விருந்தினராக எகிப்து அரசினையும் இந்தியா அழைத்துள்ளது.
  • இந்தியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் உலக விவகாரங்களில் உருவாக்கப்பட்ட அணி சேரா இயக்கத்தின் ஸ்தாபன பங்குதார நாடுகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்