உபரி ஆற்றலை விற்பனை செய்யும் நேபாளம்
November 6 , 2021
1390 days
527
- நேபாள அரசு உபரி மின்சாரத்தை இந்தியச் சந்தையில் விற்பனை செய்ய இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.
- நேபாளத்திடமிருந்து இந்தியா மின்சாரம் வாங்குவது இதுவே முதல்முறையாகும்.
- 39 MW திறன் மின்சாரத்தினை இந்திய ஆற்றல் பரிமாற்ற நிறுவனத்திடம் விற்பனை செய்வதற்கு மத்திய மின்சார ஆணையமானது நேபாளத்திற்கு அனுமதி வழங்கியது.
- இவை 24 MW திரிசூலி நீர்மின் நிலையம் மற்றும் 15 MW வேதிகாட் நீர்மின் நிலையம் ஆகியவற்றால் உற்பத்தி செய்யப்படும்.
- அந்த இரண்டு நீர்மின் நிலையங்களும் இந்தியாவின் உதவியுடன் உருவாக்கப்பட்டன.
Post Views:
527