நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உயர் லட்சியமிக்க உபார்தே சிதாரே நிதி எனும் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.
ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்காக வேண்டி இது தொடங்கப்பட உள்ளது.
உபார்தே சிதாரே நிதியானது EXIM வங்கி மற்றும் SIDBI ஆகியவற்றால் இணைந்து அமைக்கப் பட்டதாகும்.
இது லக்னோவில் தொடங்கப்பட உள்ளது.
மேலும் அவர் ‘உத்தரப் பிரதேசத்திலிந்து ஏற்றுமதிப் போக்குகள், வாய்ப்புகள் மற்றும் கொள்கையின் கண்ணோட்டங்கள்’ என்ற இந்தியா எக்சிம் வங்கியின் ஆய்வினையும் வெளியிட்டார்.
உபார்தே சிதாரே திட்டமானது உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில் உள்நாட்டு அரங்கில் ஜாம்பவான்களாகத் திகழும் இந்திய நிறுவனங்களையும் அடையாளம் காணும்.
இந்த நிதியானது இந்திய நிறுவனங்களுக்கான தொகுப்பு ஆதரவு, கடன் மற்றும் தொழில்நுட்ப உதவிகளின் ஒரு கலவையாகும்.