TNPSC Thervupettagam
October 23 , 2026 16 hrs 0 min 44 0
  • வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றிய உம்மிடி எத்திராஜ் தனது 99 வயதில் சென்னையில் காலமானார்.
  • பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திர இந்தியாவிற்கு அதிகார மாற்றத்தைக் குறிக்கும் வகையில் 1947 ஆம் ஆண்டில் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி செங்கோலை வடிவமைப்பதில் எத்திராஜ் ஈடுபட்டார்.
  • 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி இரவு, தமிழ்நாட்டின் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த பூசாரிகளால் ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் வழங்கப் பட்டது.
  • 125 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நகை நிறுவனமான உம்மிடி ஜூவல்லர்ஸால் இந்த செங்கோல் வடிவமைக்கப்பட்டது.
  • 2023 ஆம் ஆண்டு மே 28 அன்று, பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் செங்கோலை முறைப்படி நிறுவினார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்