March 14 , 2026
3 days
27
- இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள உயரமான பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கடமான் (Rusa unicolour) முதல்முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்த இனம் கலாடாப்-கஜ்ஜியார் வனவிலங்கு சரணாலயம் மற்றும் கம்குல் வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றில் 2,500–3,000 மீட்டர் உயரத்தில் கண்டறியப்பட்டது.
- கடமான் தெற்காசியாவின் மிகப்பெரிய மான் இனமாகும் என்பதோடு இது IUCN செந்நிறப் பட்டியலில் 'எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம்' என வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
- இந்த இனம் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972ன் அட்டவணை IIIன் கீழ் பாதுகாக்கப் படுகிறது.
Post Views:
27