TNPSC Thervupettagam

உயர் அதிர்வெண் கொண்ட பிளாஸ்மா அலைகள் – செவ்வாய்

April 18 , 2024 13 days 84 0
  • இந்தியப் புவிக் காந்தவியல் ஆராய்ச்சி நிறுவனத்தினைச் சேர்ந்த அறிவியலாளர்கள், நாசாவின் மேவன் விண்கலத்தின் தரவுகளைப் பயன்படுத்தி செவ்வாய்க் கிரகத்தின் மேல் மட்ட வளிமண்டலத்தில் உள்ள உயர் அதிர்வெண் கொண்ட பல்வேறு பிளாஸ்மா அலைகளை ஆய்வு செய்தனர்.
  • இந்த அலைகள் ஆனது லாங்முயர் அலைகள் அல்லது உயர்நிலை-கலப்பின வகை அலைகள் எனப்படும் எலக்ட்ரான் அலைவுகளை உள்ளடக்கியிருக்ககும்.
  • அவை செவ்வாய்க் கிரகத்தின் காந்த மண்டலத்தில் பின்புலக் காந்தப் புலத்திற்கு இணையாகவோ அல்லது செங்குத்தாகவோ பரவுகின்றன.
  • ஆற்றல் பரிமாற்றம், துகள் முடுக்கம் மற்றும் விண்வெளியில் காணப்படும் பிளாஸ்மாக்களுக்குள் மின்னேற்றம் செய்யப்பட்ட துகள்களின் செயல்பாடுகள் ஆகியவற்றில் தாக்கத்தினை ஏற்படுத்துவதால் இந்த அலைகள் பல்வேறு பிளாஸ்மா நிகழ்வுகளில் குறிப்பிடத் தக்க பங்கு வகிக்கின்றன.
  • பிளாஸ்மா அலைகள் பூமி மற்றும் பிற கிரகங்களைச் சுற்றி பொதுவாக காணப்படும், அலைகளாகும் என்ற வகையில் இது துகள் இயக்கவியல் மீதான தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.
  • செவ்வாய்க் கிரகத்திற்கென சொந்த காந்தப்புலம் இல்லை என்ற நிலையில் சூரியக் காற்றின் தாக்கத்திற்கு உள்ளாகும் வகையில் பலவீனமான தூண்டப்பட்ட காந்த மண்டலத்தினை இது கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்