TNPSC Thervupettagam

உயர் அழுத்த மீச்சேர்ம சவ்வு

July 31 , 2025 12 hrs 0 min 14 0
  • உயர் அழுத்த கடல் நீர் உப்புநீக்கத்திற்கான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சிறிய நுண்துளை பல்லடுக்கு மீச்சேர்ம சவ்வைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
  • இது இந்தியக் கடலோரக் காவல்படையின் (ICG) கப்பல்களில் பயன்படுத்தப்படும்.
  • இது கான்பூரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வகமான DMSRDE (பாதுகாப்புப் பொருட்கள் சேமிப்பகம் மற்றும் ஆராய்ச்சி & மேம்பாட்டு நிறுவனம்) என்ற அமைப்பினால் உருவாக்கப்பட்டது.
  • இது நுண்துளை மீச்சேர்ம அடுக்குகளைப் பயன்படுத்தி உப்புகள் மற்றும் அசுத்தங்களை வடிகட்டுவதன் மூலம் கடல் நீரைச் சுத்திகரிக்க வடிவமைக்கப்பட்ட உயர் செயல்திறன் கொண்ட வடிகட்டுதல் சவ்வு ஆகும்.
  • நுண்துளை கட்டமைப்பு ஆனது மேற்பரப்பின் பரப்பளவு மற்றும் அளவு தேர்ந்தெடுக்கும் தன்மையை அதிகரிக்கிறது.
  • பல்லடுக்கு வடிவமைப்பு ஆனது மேம்பட்ட இயந்திர வலிமை, உப்பு வடிகட்டுதல்  மற்றும் வேதியியல் எதிர்ப்புத் திறனை வழங்குகிறது.
  • உப்பு நீக்கம் என்பது உப்புநீரில் இருந்து கரைந்த உப்புகள் மற்றும் பிற அசுத்தங்களை அகற்றி மனித நுகர்வு, வேளாண்மை அல்லது தொழில்துறைப் பயன்பாட்டிற்கு ஏற்ற புதிய, குடிக்கக் கூடிய வகையிலான நீரை உற்பத்தி செய்யும் செயல்முறையாகும்.
  • தலைகீழ் சவ்வூடுபரவல் (RO) என்பது சவ்வு அடிப்படையிலான நீர் சுத்திகரிப்பு செயல் முறையாகும், இதில் உப்பு நீர் அதிக அழுத்தத்தின் கீழ் பகுதியளவு ஊடுருவக்கூடிய சவ்வுகள் வழியாக செலுத்தப்படுகின்றன.
  • இது கரைந்த உப்புகள், தாதுக்கள் மற்றும் அசுத்தங்களைத் தடுத்து, நீர் மூலக் கூறுகளை மட்டுமே கடந்து செல்ல அனுமதிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்