உயர் மின்னணு நகர்திற மின்பெருக்கி (High Electron Mobility Transistors – HEMTs)
March 23 , 2021 1515 days 658 0
இந்திய அறிவியலாளர்கள் காலியம் நைட்ரைடிலிருந்து (GaN) மிகவும் ஏதுவான HEMT என்ற பெருக்கிகளை உருவாக்கியுள்ளனர்.
இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் HEMT உபகரணமாகும்.
மின்சார கார்கள், இரயில் என்ஜின்கள், மின் பரிமாற்றம், அதிக மின்னழுத்தம் மற்றும் அதிக அதிர்வெண்ணுடைய நிலைமாற்றல் ஆகியவை அவசியமான மற்ற பிற பகுதிகளிலும் இந்த உபகரணம் மிகவும் பயனுள்ளதாகும்.
மேலும் மின்பெருக்கி தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் இது இந்தியாவைச் சுயசார்பு உடையதாக மாற்றும்.
மின்னணுப் பொருட்களில் பயன்படும் இது போன்ற நிலையான மற்றும் தரமான மின்பெருக்கிகளை இறக்குமதி செய்வதற்கான செலவையும் இது குறைக்கும்.
இது பொதுவாக ஒரு OFF சாதனமாகும்.
இது 4A வரையிலான மின்னோட்டத்தை நிலை மாற்றவும், 600V மின்னழுத்தத்தில் செயல்படும் ஒரு சாதனமாகும்.
HEMT பெருக்கிகள் டிஜிட்டல் ON-OFF நிலைமாற்றிகளாக ஒருங்கிணைந்த சுற்றுகளில் பயன்படுத்தப் படுகின்றன.
சாதாரணமான மின்பெருக்கிகளை காட்டிலும், மில்லி மீட்டர் அதிர்வெண்கள் வரை அதிக அதிர்வெண்ணில் HEMT மின்பெருக்கிகள் செயல்பட இயலும்.
HEMT பெருக்கிகள் கைபேசிகள், செயற்கைக் கோள் தொலைகாட்சி ஏற்பிகள், மின்னழுத்த மாற்றிகள், மற்றும் ரேடார் உபகரணங்கள் போன்ற உயர் அதிர்வெண் பொருட்களில் பயன்படுத்தப் படுகின்றன.
இவை பெரும்பாலும் செயற்கைக் கோள் ஏற்பிகளிலும் குறை மின்பெருக்கிகளிலும் பாதுகாப்புத்தொழில்துறைகளிலும் உபயோகப்படுத்தப் படுகின்றன.