TNPSC Thervupettagam

உயர்கல்வி குறித்த அகில இந்திய ஆய்வு அறிக்கை (AISHE) 2020-2021

January 31 , 2023 927 days 472 0
  • உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையானது, 2019-20 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 7.5% அதிகரித்துள்ளதோடு, 2014-15 ஆண்டு தரவுடன் ஒப்பிடும்போது அது 21% அதிகரித்துள்ளது.
  • இந்த எண்ணிக்கையானது 4.14 கோடிக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.
  • இந்த எண்ணிக்கை 4 கோடியைக் கடந்தது இதுவே முதல் முறையாகும்.
  • 2019-20 ஆம் ஆண்டில் இருந்து பெண்களின் சேர்க்கை எண்ணிக்கை 13 லட்சம் அளவிற்கு அதிகரித்து அது 2 கோடியை எட்டியுள்ளது.
  • அனைத்துச் சமூகக் குழுக்களிலும் பதிவான முந்தைய ஆண்டு எண்ணிக்கையினை விட மொத்தப் பதிவு விகிதம் (GER) அதிகரித்துள்ளது.
  • தொலைதூரக் கல்வியில் சேர்க்கையானது,  2019-20 ஆம் ஆண்டில் பதிவான அளவினை விட 2020-21 ஆம் ஆண்டில் 7% அதிகரித்துள்ளது.
  • 2017-18 ஆம் ஆண்டில் 1 ஆக இருந்த பாலினச் சமத்துவக் குறியீடு (GPI) ஆனது 2020-21 ஆம் ஆண்டில் 1.05 ஆக அதிகரித்துள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில், வடகிழக்கு மாநிலங்களில் பதிவான பெண்களின் படிப்பறிவு 6.14 லட்சமாக உள்ள நிலையில், இது ஆண்களின் படிப்பறிவு வீதத்தினை விட (5.92 லட்சம்) அதிகமாகும்.
  • உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா ஆகியவை கல்விச் சேர்க்கை எண்ணிக்கையில் முன்னணியில் உள்ள 6 மாநிலங்களாகும்.
  • அதிக அளவில் பல்கலைக் கழகங்கள் ராஜஸ்தான் (92), உத்தரப் பிரதேசம் (84) மற்றும் குஜராத் (83) ஆகியவற்றில் உள்ளன.
  • அதிக கல்லூரி எண்ணிக்கைகள் கொண்ட மாநிலங்கள்: கர்நாடகா (62), தெலுங்கானா (53), கேரளா (50), இமாச்சலப் பிரதேசம் (50), ஆந்திரப் பிரதேசம் (49), உத்தரகாண்ட் (40), ராஜஸ்தான் (40), தமிழ்நாடு (40) ஆகியனவாகும்.
  • உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்கள் கல்லூரிகளின் எண்ணிக்கையில் முன்னணியில் உள்ள 8 மாநிலங்களாகும்.
  • 2019-20 ஆம் ஆண்டில் இருந்த மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை தற்போது 47,914 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்