கல்வி அமைச்சகமானது 2019-2020 ஆம் ஆண்டிற்கான “உயர்கல்வி குறித்த அனைத்திந்தியக் கணக்கெடுப்பு” என்ற ஆய்வு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டில் 75 ஆக இருந்த தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையானது 2020 ஆம் ஆண்டில் 135 ஆக உயர்ந்துள்ளது என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
2015-16 ஆம் ஆண்டு முதல் 2019-20 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மாணாக்கர் சேர்க்கையானது 11.4 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதே காலகட்டத்தில் மாணவிகளின் சேர்க்கை வீதமானது 18.2 சதவீதம் உயர்ந்து உள்ளது.
2019-20 ஆம் ஆண்டில் உயர்கல்வியின் மொத்த சேர்க்கையானது 3.85 கோடியாகும் (3.04% உயர்ந்துள்ளது).
இது 2018-19 ஆம் ஆண்டில் 3.74 கோடியாகவும் 2014-15 ஆம் ஆண்டில் 3.42 கோடியாகவும் இருந்தது.
பாலின சமத்துவக் குறியீடும் 1.01 என்ற அளவில் மேம்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு முதல் முனைவர் பட்டதாரி படிப்புகளுக்கான சேர்க்கையின் எண்ணிக்கையும் 60% உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு
51.4 சதவீத மொத்த மாணவர் சேர்க்கையுடன் தமிழ்நாடானது தேசிய சராசரியை விட இருமடங்கு அதிகளவில் மாணவர் சேர்க்கை உயர்வினைக் கண்டுள்ளது.
தமிழகத்தின் மொத்த மாணவர் சேர்க்கை விகிதமானது, 2030 ஆம் ஆண்டுக்குள் 50% மொத்த மாணவர் சேர்க்கையை எட்ட வேண்டும் என்ற தேசிய கல்விக் கொள்கையின் இலக்கையும் விஞ்சியுள்ளது.
2010-11 ஆம் ஆண்டில் 32.9% ஆக இருந்த மாநிலத்தின் மொத்த மாணவர் சேர்க்கை விகிதமானது 2019-20 ஆம் ஆண்டில் 51.4% ஆக உயர்ந்துள்ளது.