நிதி ஆயோக் அமைப்பானது, "உயர்கல்வியின் சர்வதேசமயமாக்கல்" என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டது.
வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களுக்கும் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க 22 கொள்கைகளை இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஈர்க்க விஸ்வ பந்து உதவித் தொகை மற்றும் புத்தாய்வு மாணவர் ஆதரவு ஆகியவற்றினை இது முன்மொழிகிறது.
இந்த அறிக்கை ஈராஸ்மஸ் பிளஸ் போன்ற கல்வி இயக்கம் திட்டத்தைப் பரிந்துரை செய்கிறது (ஈராஸ்மஸ் பிளஸ் என்பது ஓர் ஐரோப்பிய ஒன்றிய மாணவர் பரிமாற்றத் திட்டம்).
பாரத் வித்யா கோஷ் எனப்படும் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆராய்ச்சி நிதியை இது பரிந்துரைக்கிறது.
இந்தச் செயல் திட்டம் "வளாகத்திற்குள் வளாகம்" என்ற மாதிரியின் கீழ் இந்தியாவில் உள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழக வளாகங்களை ஆதரிக்கிறது.