உயர்நீதிமன்ற நீதிபதி நீதிமன்ற வழக்கிலிருந்து விலகல்
September 10 , 2020 1812 days 717 0
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதியான சுவிர் சேகல் என்பவர் பல்வந்த் சிங் முல்தானி என்பவர் காணாமல் போனதாகவும் மற்றும் அவர் கொலை செய்யப் பட்டதாகவும் கூறப்படும் வழக்கில் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் டிஜிபியான சுதேத் சிங் சைனி என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனு வழக்கு மீதான விசாரணையிலிருந்து விலகியுள்ளார்.
இந்த வழக்கிலிருந்துத் தன்னை விடுவித்துக் கொண்ட அந்த நீதிபதி, இந்த வழக்கை மீண்டும் பட்டியலிடுவதற்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இந்த விவகாரத்தை அனுப்பியுள்ளார்.
வழக்கிலிருந்து விலகுதல் எனப்படும் நீதித்துறைத் தகுதியிழப்பானது வழக்கை விசாரித்தல் அல்லது நிர்வாக அதிகாரியாக கருத்து வேற்றுமையின் காரணமாக சட்ட நடைமுறைகள் போன்ற அலுவல்பூர்வ நடவடிக்கைகளில் பங்கேற்பதிலிருந்து விலகிக் கொள்வதைக் குறிக்கின்றது.
நீதிபதிகள் வழக்கிலிருந்து விலகுவதற்கு எந்தவொரு வரையறையும் தற்பொழுது வரை விதிக்கப்படவில்லை.