ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பானது இந்தியாவின் உயர்நோக்கு லட்சிய மாவட்டங்கள் என்ற திட்டத்தினை “உள்ளூர்ப் பகுதி மேம்பாட்டிற்கான மிக வெற்றிகரமான முன்மாதிரி” எனப் பாராட்டியுள்ளது.
இது சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு சுயமதிப்பீடு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு இந்தத் திட்டமானது ஓர் ஊக்கமாகச் செயல்படுவதை ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பின் பகுப்பாய்வானது கண்டறிந்துள்ளது.