உயிரணு அளவிலான இயந்திர மனிதன் - சின்செல்ஸ் (Syncells)
October 28 , 2018 2607 days 851 0
பெரும் எண்ணிக்கையிலான “Syncells” (செயற்கை உயிரணுக்கள்) என்று பெயர் கொண்ட இயந்திர மனிதனை வடிவமைப்பதற்கான முறையை மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த இயந்திர மனிதனை எண்ணெய் அல்லது வாயுக் குழாயின் உட்பகுதியினை கண்காணிக்கவும் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் நோயைக் கண்டறியவும் பயன்படுத்த முடியும்.
அணுநிலை சார்ந்த மெல்லிய, நொறுங்கும் தன்மையுடைய பொருட்களில் இயற்கை முறிவு ஏற்படுவதை கட்டுப்படுத்துவதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான “Syncells” - க்களை உற்பத்தி செய்ய முடியும்.
முறிவு ஏற்பட்டுள்ள இடங்களைக் கண்டறியக்கூடிய ஆட்டோபெர்பரேஷன் என்ற செயல்முறையைப் பயன்படுத்தி தேவையான அளவு மற்றும் தேவைப்படும் வடிவத்திலான மிகச்சிறிய பாக்கெட்டை (pocket) இதனால் உருவாக்க முடியும்.
இந்த பாக்கெட்டிற்குள் தகவலை சேகரிப்பதற்காக மின்னணுத் தொடர்கள் மற்றும் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
Syncells-ன் வெளித் தோற்றமானது “கிராபைன்” என்ற இருபரிமாண வடிவமுள்ள கார்பன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.