TNPSC Thervupettagam

உயிரி-கருப்புக்கீல் தொழில்நுட்பம்

April 1 , 2026 7 days 85 0
  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையானது (CSIR), பெரிய அளவிலான சாலை கட்டுமானத்திற்காக உயிரி-கருப்புக்கீல் தொழில்நுட்பத்தை மாற்றிக் கொடுத்துள்ளது.
  • இத்தொழில்நுட்பம் CSIR-மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (CRRI) மற்றும் CSIR-இந்தியப் பெட்ரோலிய நிறுவனம் (IIP) ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்டது.
  • உயிரி-கருப்புக்கீல் என்பது வெப்ப வேதியியல் மாற்றத்தின் மூலம் பயிர் கழிவுகளில் (லிக்னோசெல்லுலோஸ் உயிரித்திரள்) இருந்து தயாரிக்கப்படுகிறது.
  • இது பயிர்க் கழிவுகளை எரிப்பதைக் குறைக்கவும், சுழற்சி பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்கவும் மற்றும் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் அளிக்கவும் உதவுகிறது.
  • இது தேசிய நெடுஞ்சாலைக் கட்டுமானத்திற்கு ஏற்ற குறைந்த கார்பன் மாற்றாகும் மற்றும் இந்தியாவின் 'நிகரப் பூஜ்ஜிய' இலக்குகளுக்கு உறுதுணையாக உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்