உயிரி டீசல் உற்பத்தியில் கோழி இறைச்சிக் கழிவுகளின் பயன்பாடு
July 30 , 2021 1476 days 667 0
உயிரி டீசல் உற்பத்தியில் கோழி இறைச்சிக் கழிவுகளைப் பயன்படுத்தும் முறைக்கு கேரளாவைச் சேர்ந்த ஜான் ஆப்ரஹாம் என்பவர் காப்புரிமையைப் பெற்றுள்ளார்.
இந்த உயிரி டீசலானது லிட்டருக்கு 38 கி.மீ. அளவிலான மைலேஜினை வழங்குகிறது.
தற்போதைய டீசல் விலையில் 40 சதவீதமே விலையுடைய இந்த உயிரி டீசல் ஆனது மாசுபாட்டினையும் பாதியாகக் குறைக்கிறது.
இந்தக் கண்டுபிடிப்பானது தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழான நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் மேற்கொண்ட ஜான் ஆப்ரஹாம் அவர்களின் ஆராய்ச்சியின் ஒரு விளைவாகும்.