உயிரித் தகவல் தரவின் விரிவான மற்றும் அயலகப் பயன்பாடு
December 8 , 2019 2092 days 751 0
உயிரித் தகவல் தரவின் விரிவான மற்றும் அயலகப் பயன்பாட்டில் சீனா, மலேசியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா ஐந்தாவது இடத்தில் மிக மோசமான நாடாக உள்ளது.
இந்தப் புதிய அறிக்கையானது பிரிட்டனில் உள்ள ஒரு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான கம்பாரிடெக் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் இந்தியா 19 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. உயிரித் தகவல் தரவு சேகரிப்பிற்கான மோசமான நாடுகளின் பட்டியலில் ஒப்பீட்டளவில் கீழ் நிலையில் இந்தியா இருக்கின்றது.
உயிரித் தகவல் தரவை சேகரித்தல், சேமித்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் ஐக்கிய இராஜ்ஜியம், போர்ச்சுக்கல், சைப்ரஸ், அயர்லாந்து மற்றும் ருமேனியா ஆகியவை சிறந்த 5 நாடுகளாக உருவெடுத்துள்ளன.