TNPSC Thervupettagam

உயிரியல் பூங்கா மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கை 2022

September 23 , 2022 1021 days 503 0
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகமானது சமீபத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான உயிரியல் பூங்கா மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையினை (MEE-ZOO) வெளியிட்டது.
  • இது இந்தியா முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு  கணக்கெடுப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
  • இந்தியாவில் தற்போது 147 அங்கீகரிக்கப்பட்ட உயிரியல் பூங்காக்கள் உள்ளன.
  • அவை பெரிய (17), நடுத்தர (23), சிறிய (33), குறு உயிரியல் பூங்காக்கள் (60) மற்றும் மீட்பு மையங்கள் (14) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • சமீபத்திய உயிரியல் பூங்கா மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையானது 39 உயிரியல் பூங்காக்களைப் பெரிய மற்றும் நடுத்தர வகைகளின் கீழ் மதிப்பீடு செய்தது.
  • வண்டலூர் உயிரியல் பூங்காவானது "மிகச் சிறந்தப் பூங்கா" என்று மதிப்பிடப் பட்டு உள்ளதோடு, பெரிய உயிரியல் பூங்கா என்ற பிரிவில் அது மிகச் சிறந்த செயல்திறன் கொண்டதாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • மேற்கு வங்காளத்தின் பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்காவானது நடுத்தர உயிரியல் பூங்கா என்ற பிரிவில் சிறந்த செயல்திறன் கொண்டதாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
  • அலிப்பூர் விலங்கியல் பூங்கா, தேசிய விலங்கியல் மற்றும் நவாப் வாஜித் அலி ஷா விலங்கியல் பூங்கா ஆகியவை சூழல் கூறுகளில் சிறந்த செயல்திறன் கொண்டதாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
    • திட்டமிடல் கூறுகளில் சிறந்து விளங்கும் பூங்கா: வண்டலூர் உயிரியல் பூங்கா.
    • உள்ளீட்டுக் கூறுகளில் சிறந்து விளங்கும் உயிரியல் பூங்கா: வண்டலூர் உயிரியல் பூங்கா, பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா மற்றும் மைசூர் உயிரியல் பூங்கா.
    • செயல்முறைக் கூறுகளில் சிறந்து விளங்கும் பூங்கா: கான்பூர் விலங்கியல் பூங்கா மற்றும் மைசூர் உயிரியல் பூங்கா.
    • வெளியீட்டுக் கூறுகளில் சிறந்து விளங்கும் பூங்கா: வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா.
    • விளைவுக் கூறுகளில் சிறந்து விளங்கும் உயிரியல் பூங்கா: பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்