இந்தியத் தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) ஆனது, UPI கட்டணங்களுக்கான உயிரியளவியல் மற்றும் அணியக்கூடிய வகையிலான கண்ணாடி வழியிலான அங்கீகார வசதியினை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்த புதிய அமைப்பு ஆனது, பயனர்கள் ஆதாரில் சேமிக்கப்பட்ட முக அங்கீகாரம் அல்லது கைரேகைகளைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை அங்கீகரிக்க அனுமதிக்கிறது.
பயனர்கள் வழக்கமான UPI PIN எண் உள்ளிடாமல், இணக்கமான சாதனங்கள் மூலம் பணம் செலுத்துவதை அங்கீகரிக்கலாம்.
அணியக் கூடிய ஸ்மார்ட் கண்ணாடி வசதியானது, குரல் வழிக் கட்டளைகள் மற்றும் QR குறியீடு ஸ்கேனிங் மூலம் எளிதான சிறிய மதிப்புப் பரிவர்த்தனைகளை செயல்படுத்துகிறது.
இந்த முன்னெடுப்புகள் ஆனது இந்தியா முழுவதும் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் டிஜிட்டல் கட்டணங்களை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.