உயிருள்ள மூளையிலுள்ள புரதங்களைக் கண்டறிய புதிய முறை
August 16 , 2021 1447 days 650 0
உயிருள்ள விலங்கின் மூளையிலுள்ள வெவ்வேறு வகையான நியூரான்களினுள் உள்ள புரதங்களை அடையாளம் காண்பதற்கான புதிய மற்றும் வெற்றிகரமான அணுகுமுறை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக வெளிக் கொணர்ந்து உள்ளனர்.
இந்தப் புதிய ஆய்வானது நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் மற்றும் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் ஆகியவற்றால் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
குறிப்பு
ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்தப் புதிய ஆய்வில் ஒரு உயிருள்ள எலியின் மூளையிலுள்ள ஒரு துல்லியமான இடத்திற்கு ஒரு நொதியினைக் கொண்டுச் செல்வதற்கான ஒரு வைரசினை அவர்கள் வடிவமைத்துள்ளனர்.
சோயா பீன்களிலிருந்து பெறப்பட்ட இந்த நொதியானது அதனருகே உள்ள புரதங்களை ஒரு குறிப்பிட்ட துல்லியமான இடத்தில் மரபணு ரீதியாக இணைக்கின்றது.
இந்தத் தொழில்நுட்பமானது உயிருள்ள நியூரான்களினுள்ள உள்ள ஒட்டு மொத்த புரதங்களையும் புகைப்படமெடுத்து, பின்னர் ஒரு நிறமாலை மானியைக் (spectroscopy) கொண்டு பகுப்பாய்வு செய்கிறது.