உயிர்க்கோள காப்பகங்களுக்கான சர்வதேச தினம் 2026 - நவம்பர் 03
November 5 , 2026 2 days 67 0
பல்லுயிர்தன்மை பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னிலைப்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது யுனெஸ்கோவால் 2021 ஆம் ஆண்டு நவம்பரில் அறிவிக்கப்பட்டு, 2022 ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.
1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யுனெஸ்கோவின் மனிதன் மற்றும் உயிர்க்கோள காப்பக (MAB) திட்டத்தின் கீழ் உயிர்க்கோள காப்பகங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன.
இந்தியாவில் அறிவிக்கப்பட்ட 18 உயிர்க்கோள காப்பகங்கள் உள்ளன, அவற்றில் 13 யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குளிர் பாலைவன உயிர்க்கோள காப்பகமானது (Cold Desert Biosphere Reserve) 2025 ஆம் ஆண்டில் புதிதாக சேர்க்கப்பட்டதாகும்.
உயிர்க்கோளக் காப்பகங்களின் உலகளாவிய வலையமைப்பு (WNBR) 145 நாடுகளில் 2026 ஆம் ஆண்டின் நிலவரப்படி 797 உயிர்க்கோள காப்பகங்களைக் கொண்டுள்ளது.